19/May/2025 10:08:58
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூர் கறம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கீரமங்கலம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற செரியலூர் கறம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.தொடர்ந்து, மண்டகபடிதாரர்கள் சார்பில் கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோர் தேரை இழுத்து வந்தனர்.இதில் செரியலூர் கறம்பக்காடு, கீரமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கீரமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.