logo
அறந்தாங்கியில் கொரோனாவில் இறந்தவர் சடலத்தை அடக்கம் செய்த  தவ்ஹீத்ஜமாத் அமைப்பினர்

அறந்தாங்கியில் கொரோனாவில் இறந்தவர் சடலத்தை அடக்கம் செய்த தவ்ஹீத்ஜமாத் அமைப்பினர்

16/May/2021 08:45:34

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டைமாவட்டம்,அறந்தாங்கி அருகே செங்கரை கிராமத்தில்  கொரோனா தொற்றுநோயினால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த பெண்ணில் சடலத்தை சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி  தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.

 

கொரோனாவில் உயிரிழந்த செங்கரா கிராமத்தைச்சேர்ந்த அந்த பெண்ணின்  குடும்பத்தினர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொண்டு நல்லடக்கம்  செய்ய உதவிடுமாறு கேட்டுகொண்டதன்அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையுடன் தமிழக சுகாதாரத் துறையின் முறையான வழிகாட்டு  நெறிமுறைகளை பின்பற்றி  அந்த பெண்ணின்  சடலம்    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறந்தாங்கி கிளை சார்பில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து, அறந்தாங்கி கிளை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கூறியதாவது, நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்ற குர்-ஆன் மொழிப்படி இந்த சேவையைச் செய்து முடித்ததாக நெகிழ்ச்சியுன் தெரிவித்தனர்.

Top