logo
கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவருக்கு நிவாரண உதவி செய்ய மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனிடம் அமைச்சர் மெய்யநாதன் நேரில் வலியுறுத்தல்

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவருக்கு நிவாரண உதவி செய்ய மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனிடம் அமைச்சர் மெய்யநாதன் நேரில் வலியுறுத்தல்

30/Jun/2021 09:42:18

புதுக்கோட்டை, ஜூன்: கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவருக்கு நிவாரண உதவி செய்ய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம்   நேரில் வலியுறுத்தியதாக  சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது பதிவில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம் அருகில் உள்ள புதுக்குடியைச் சேர்ந்த மீனவர் எம்.தினமணி மற்றும் அவரது மகன்கள் வசீகரன், மணிகண்டன் ஆகிய மூவரும் கடந்த 26.6.2021 அன்று கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற பொழுது படகிலிருந்து தவறி விழுந்த வசீகரன் காணாமல் போய் விட்டார். அவரைத் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி  ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்து தேடுதலை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்

இந்நிலையில் கடந்த 28.6.2021 அன்று வசீகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட செய்தி அறிந்து அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மேலும் உதவி செய்யும் பொருட்டு மீன்வளத்துறை சார்பில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகள் விரைந்து கிடைத்திட   30.6.2021 -இல்   மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை  நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தேன்.

மனுவினை பெற்றுக் கொண்ட  மீன்வளத்துறை அமைச்சர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்கள் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதிவிட்டுள்ளார்.

Top