logo
ஆலங்குடி அருகே வீட்டு கதவை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு

ஆலங்குடி அருகே வீட்டு கதவை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு

31/Jul/2026 03:28:05


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வீட்டு கதவை உடைத்து சுமார் 50 பவுன் தங்க நகைகளை புதன்கிழமை இரவு மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா வீட்டை பூட்டிவிட்டு புதன்கிழமை நடைபெற்ற  கொத்தமங்கலம் பிடாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். திரும்பிச்சென்று வீட்டை பார்த்தபோது கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கீரமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Top