logo
ஈரோடு மாநகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 50 கிலோ பறிமுதல் 3 பேர் கைது : கார் பறிமுதல்

ஈரோடு மாநகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 50 கிலோ பறிமுதல் 3 பேர் கைது : கார் பறிமுதல்

30/Jul/2021 11:06:15

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாநகர் பகுதியில் போலீசார் மேற்கொண்ட  அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 50  கிலோ புகையிலை பொருட்களா பறிமுதல் 3 பேரையும் காரும்  பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பான்பராக் ,ஹான்ஸ் போன்றவை கடைகளில் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து மாவட்ட எஸ்பிசாரங்கன் உத்தரவின் பேரில், டவுன் டி.எஸ்.பி. ராஜூ மேற்பார்வையில் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் கடந்த சில நாட்களாகவே மாநகர் பகுதியில் உள்ள மளிகை கடை, குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

 இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அதை விற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டவுன் டிஎஸ்பி ராஜீ மேற்பார்வையில் ஈரோடு மாநகர் பகுதிக்கு உள்பட்ட கருங்கல்பாளையம் கொங்கலம்மன் கோயில் வீதி நாடார்மேடு கொல்லம்பாளையம் 46 புதூர் உள்பட 15 இடங்களில் உள்ள மளிகை கடை, குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில், கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு மளிகை மொத்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இது தொடர்பாக மதன் ராம் (20), வினோத் (33), ஆம்னி நாகராஜன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மதிப்பு ரூ .50 ஆயிரம் இருக்கும். மேலும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Top