logo
ஆலங்குடியில் வீடு வீடாகச்சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம்:அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு.

ஆலங்குடியில் வீடு வீடாகச்சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம்:அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு.

10/Jun/2021 05:33:07

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சியில் வீடு வீடாகச்சென்று காய்ச்சல் கண்டறியும் முகாமை சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

 ஆலங்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வீடுவீடாகச்சென்று காய்ச்சல் கண்டறியும் முகாமில் ஆய்வு மேற்கொண்டு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியது: ஆலங்குடி பேரூராட்சியில் உள்ள  4,318 குடியிருப்புகளில் 13,712 பேர் வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளுக்கே சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

அதில், கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள், அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட தெர்மல் ஸ்கேன் கருவி, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளின் மூலம் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார். ஆய்வின்போது, ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Top