14/Jul/2021 02:22:31
ஈரோடு, ஜூலை: தமிழகத்தில் 2026 -இல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 150 பேர் சட்டமன்றம் செல்வார்கள் என்றார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை கோவையில் இருந்து சென்னை வரை யாத்திரை செல்லும் வழியில் ஈரோடு மாவட்டத்துக்கு வந்த அவருக்கு ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஈரோடு பழையபாளையம் அருகில் பாஜக மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, 2026 சட்டமன்ற தேர்தலில் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள்.தமிழகத்தில் பாஜக வை பொறுத்தவரையில் தலைவர் பதவி முக்கியத்துவம் கிடையாது அது ஒரு சேவை.
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எனக்கு முக்கியம். தற்போது எப்படி 4 சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி சட்டமன்றத்திற்குள் சென்றார்களோ அதே போல வரும் தேர்தலில் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லும் வகையில் நாம் பாடுபட வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்பதே விருப்பம் . பாஜகவின் இரும்பு தூண் தொண்டர்கள் தான் என்றார் அவர்.