20/Oct/2020 11:59:02
ஈரோடு மாநகராட்சி காந்திஜி சாலையிலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 28 பெண்களுக்கு லேப்பராஸ்கோப்பிக் முறையில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் நோய் பரவல் காரணத்தினால் கடந்த 6 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து காட்டிய மருத்துவர்கள், செவிலியர்கள், நகர சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு ஆணையாளர் மா. இளங்கோவன் வாழ்த்துகள் தெரிவித்தார். ஆய்வின்போது துணை இயக்குநர், குடும்ப நலம் மற்றும் மாநகர நல அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.