logo
ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவைக்கு  தேர்தல்..?

ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல்..?

10/Feb/2021 07:50:14

சென்னை, பிப்: எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில்  அனைத்துக்கட்சியினரும் ஒரே கட்டமாகசட்டப்பேரவைத் தேர்தலை நடத்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கும் முறையை வரவேற்ற அதிமுக, ஏப்ரல் மாதம் 4-ஆவது வாரதத்தில் தேர்தல் நடத்த கோரிக்கையை விடுத்துள்ளது. 

இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மனோஜ் பாண்டியன், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, மற்றும் சிபிஎம் சார்பில் டி.கே ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர் திமுக சார்பில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு ... திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு



80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிக்கும் நடைமுறையை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 


கொரோனா காலகட்டத்தில் முதல்முறையாக பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.இதே சலுகையை தற்போது நடைபெறவிருக்கும் தமிழகம், புதுவை, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. 



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் சென்னை வருகை தந்துள்ளனர். சட்டசபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 


அப்போது தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 13 லட்சம் பேர் உள்ளனர். இந்த 80 வயது முதியவர்கள் தபால் வாக்கு அளிக்கும் நடைமுறைக்கு அதிமுக ஆதரவு தந்துள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் தபால் வாக்கு தேவையில்லை என பாஜக தெரிவித்துள்ளது.அது போல் 80 வயதுடையோருக்கு தபால் ஓட்டு நடைமுறைக்கு திமுக, காங், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தபால் வாக்கு கொடுத்தால் வாக்களிப்பதில் ரகசியம் காக்கப்படாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Top