logo
புதுகை நகர் மன்றத்தில் கோவிட் தடுப்பூசி முகாம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு

புதுகை நகர் மன்றத்தில் கோவிட் தடுப்பூசி முகாம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு

01/Jun/2021 10:35:13

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை நகர்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது.இந்த நிலையில் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது முதலில் தடுப்பூசி சேர்த்துக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் கடந்த ஐந்து தினங்களாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொதுமக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 1.40 லட்சம்  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரம் பேர் 18 முதல் 44 வயதுவரை. இந்த நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை தமிழகம் முழுவதும் இருப்பதால்  ஒருநாள் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி இன்று அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதுக்கோட்டை நகர மன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அதிக அளவு பொதுமக்கள் நீண்ட வரிசையில் என்றும் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த பணியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் இருப்பிலுள்ள தடுப்பூசி  செவ்வாய்க்கிழமை முடிவடைந்து விடும் மறுநாள் அரசிடமிருந்து தடுப்பூசி ஒதுக்கீடு  வந்தால் மட்டுமே போடக் கூடிய சூழ்நிலை மாவட்டத்தில் உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, புதுகை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா,  சுகாதாரத்துறை துணை இயக்குநர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் .நைனாமுகமது, எம்.எம். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top