logo
ஈரோட்டில் கொரோனாவால்   பாதிக்கப்பட்ட ரேஷன் கடை   ஊழியர் பலி

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரேஷன் கடை ஊழியர் பலி

05/Jun/2021 01:29:10

ஈரோடு, ஜூன் ஈரோட்டில் கொரோனாவால்   பாதிக்கப்பட்ட ரேஷன் கடை   ஊழியர் பலியானார்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஆர்.சவுகத்தலி(49). இவர், சம்பத் நகரில் உள்ள ஸ்ரீநடேசர் கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் எடையாளராக பணி செய்தார். இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

 இவருக்கு ஒரு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.கொரோனா பரவல் நிலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி,ரூ. 2,000-க்கான டோக்கன் வீடுவீடாக வழங்கும் பணி, அதனை வினியோகிக்கும் பணிகளை நிறைவு செய்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தமிழக அரசு, அவரது குடும்பத்துக்கு முன்களப்பணியாளர்களுக்கு வழங்குவது போல, கொரோனா நிவாரண நிதி மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் வழங்க வேண்டும், என ரேஷன் கடை ஊழியர்கள் மாவட்ட நிர்வாகத்திடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top