logo
ஆலங்குடி அருகே 1500 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்.

ஆலங்குடி அருகே 1500 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்.

18/May/2021 09:31:42

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுமார் 1500 லிட்டர் சாராய ஊறலை புதன்கிழமை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.

  ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கருக்காகுறிச்சி தாளக்கொல்லை காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 5 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1500 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து, வடகாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதே பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 2600 லிட்டர் சாராய ஊறலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Top