logo
புதுக்கோட்டை செஞ்சுரி  லயன்ஸ் சங்கம் சார்பில் ஏழை பெண்ணுக்கு நலத்திட்ட உதவி

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் ஏழை பெண்ணுக்கு நலத்திட்ட உதவி

25/Dec/2020 01:21:55

புதுக்கோட்டை  செஞ்சுரி  லயன்ஸ் சங்கம் சார்பில் இரண்டாம் வட்டார  ஆலோசனை கூட்டம்    நலத்திட்ட    உதவி    வழங்கும் நிகழ்ச்சி புவனேஸ்வரி தங்கமாளிகை கூட்ட அரங்கில்   நடந்தது.

 வட்டாரத்தலைவர் கேஆர்.விஜயரெங்கன்  தலைமை வகித்தார்.  செஞ்சுரி  லயன்ஸ் சங்கத் தலைவர் புவனேஸ்வரி தங்கமாளிகை   எஸ் . நடராஜன்   வரவேற்றார்.   நிகழ்வில்    புதுக்கோட்டை செஞ்சுரி  லயன்ஸ் சங்கம்செயலாளர்  அரவிந்த்,  பொன்னமராவதி  ராயல் லயன்ஸ் சங்கச் செயலாளர் ரெத்தினம் ,  ஷைன்  லயன்ஸ் சங்கச் செயலாளர் கார்த்திக்,   பாலக்குறிச்சி பிரைடு லயன்ஸ் சங்கச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.

  வட்டாரத் தலைவர் கேஆர்.விஜயரெங்கன் திட்ட விளக்க உரை கையேடுகளை வழங்கினர்.  ஏதிர்கால திட்டங்கள்பற்றி   தலைவர்  எஸ் . நடராஜன் பேசுகையில், புதுக்கோட்டை  செஞ்சுரி  லயன்ஸ் சங்கம் தொடர்ந்து சிறந்த  திட்டங்களை  செய்து  வருகின்றது.  விரைவில் கண்தான நிகழ்ச்சி கண் மருத்துவ முகாம் நடத்த உள்ளோம். தற்போது கொரனா  வைரஸ்யிலிருந்து நாம் அனைவரும்   மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் ஏழை எளியோர்க்கு நலத்திட்டங்கள் வழங்கவுள்ளோம்  என்றும்  கூறினார். 

பொன்னமராவதி  லயன்ஸ்  சங்க தலைவர்கள் ராஜேந்திரன் ,அமலாஜோசப் ,குருநாதன் ஏதிர்கால திட்டங்கள் பற்றி பேசினார்கள்.  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டாரத் தலைவர் கேஆர்.விஜயரெங்கன்,  புதுக்கோட்டை  செஞ்சுரி  லயன்ஸ் சங்கம் சார்பில் ஏழை பெண்ணுக்கு நிதிஉதவி வழங்கியும் அனைத்து லயன்ஸ் சங்க நிர்வாகிகளையும் பாராட்டி பேசினார்.   கூட்டத்தில், சங்க  நிறுவனர் கண்ணன், டாக்டர் முத்துராஜா, செஞ்சுரி  லயன்ஸ் சங்க  நிர்வாகிகள் முன்னாள் தலைவர்கள் தெட்சிணாமூர்த்தி, டாக்டர் முத்துராஜா  உள்பட பலர்  கலந்து கொண்டனர்.  பொருளாளர் சேது கார்த்திகேயன் நன்றி 

Top