logo
ஆலங்குடியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

ஆலங்குடியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

23/May/2021 05:17:48

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

 ஆலங்குடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் வாகனங்களின் மூலம் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது:

கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதில், மே.10 முதல் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தில் திங்கள்கிழமை முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியே வராத வகையில், வாகனங்களின் மூலம் காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான  காய்கறிகள் அவர்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாக சென்று தரமாகவும், விலை குறைவாகவும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு காய்கறிகள் அடங்கிய காய்கறி தொகுப்பு பைகளும் குறைவான விலையில் வழங்கப்படுகிறது. இந்த நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் ஆலங்குடி பேரூராட்சியில் கலீப்நகர், அண்ணாநகர், பள்ளத்திவிடுதி, கல்லாலங்குடி, எஸ்எஸ் நகர்  உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்ய உள்ளது. மேலும் கூட்டுறவுத்துறையின் மூலம் மாவட்டத்தில் 60 இடங்களில் நடமாடும் காய்கறி கடைகள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்யப்பட உள்ளது என்றார்.

நிகழ்வில்,  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top