logo
முதலமைச்சரின்  போர்க்கால நடவடிக்கையால் கோவிட் நோய் தொற்று 70 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது: அமைச்சர் ரகுபதி பேச்சு

முதலமைச்சரின் போர்க்கால நடவடிக்கையால் கோவிட் நோய் தொற்று 70 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது: அமைச்சர் ரகுபதி பேச்சு

18/Jun/2021 06:41:55

புதுக்கோட்டை, ஜூன்: தமிழக முதலமைச்சரின் போர்க்கால நடவடிக்கைகளால் கோவிட் நோய் தொற்று 70 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது என்றார்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கோட்டூரில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (18.6.2021) வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில்  கோவிட் சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்கினார்.

பின்னர்  அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது: கோவிட் பேரிடர் காலத்தில்  மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில்  முதலமைச்சர் அறிவித்த கோவிட் சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ.2,000 மற்றும்  14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வழங்கப்பட்ட  ரூ.2,000 நிவாரண உதவித்தொகை பொதுமக்களுக்கு மிகுந்து பயனுள்ளதாக அமைந்தது.

கொரோனா தொற்றை கட்டப்படுத்துவதில் தமிழக அரசு வெற்றி அடைந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற 35 நாட்களுக்குள் கொரோனா தொற்றை 70 சதவீதத்திற்கு மேல் குறைத்து சாதனை படைத்துள்ளார்அதிகளவிலான பொதுமக்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தினால் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கலாம். எனவே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனால் தற்பொழுது தடுப்பூசி போடும் இடங்களில் பொதுமக்கள் சரியான நேரத்தில் வருகை தந்து அதிகளவில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தமிழக முதலமைச்சர்  பாரத பிரதமரை  நேரில் சந்தித்தபோது தமிழகத்திற்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முன்னாள் முதல்வர் கலைஞர்  ஆட்சிக்காலத்தில் வரும் முன் காப்போம்  என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு நோய் வரும் முன்பே பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு எண்ணற்ற பொதுமக்கள் நோய் தொற்றிலிருந்து காப்பாற்றபட்டனர். அதுபோன்று தற்பொழுதும் முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மருத்துவ முகாம்கள் நடத்தி நோய் தொற்று கண்டறிந்து  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் அனைவரும் கோவிட் தொற்று முற்றிலுமாக முடியும் வரை முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல் போன்ற  தடுப்பு வழிமுறைகளை தவறாது கடைபிடித்து துகாத்து கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி .

இதில்கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, துணை ஆட்சியர் (பயிற்சி) சுகிதாஊராட்சிமன்ற தலைவர் சிதம்பரம், கூட்டுறவு சங்கத்தலைவர் குமரேசன் மற்றும் அழகுசிதம்பரம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top