logo
ஈரோட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: அமைச்சர்  முத்துசாமி   தலைமையில் ஆய்வு கூட்டம்

ஈரோட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆய்வு கூட்டம்

13/May/2021 05:40:22

ஈரோடு, மே:   ஈரோடு மாவட்டத்தில்  மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி. கதிரவன், முன்னாள் அமைச்சர்கள்  கோபி எம்எல்ஏ- கே.ஏ.  செங்கோட்டையன், பவானி எம்எல்ஏ- கே சி கருப்பண்ணன், பெருந்துறை எம்எல்ஏ- ஜெயக்குமார், மொடக்குறிச்சி எம்எல்ஏ- சி. கே .சரஸ்வதி, பவானிசாகர்  எம்எல்ஏ- பண்ணாரி ,ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ- திருமகன் ஈவெரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப்பின்,அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத் தின் முன்னேற்றத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வ ர் கூறுகிறார். அதுபோன்று, இங்கும் அனைவரும் இணைந்து, அரசியல் பார்க்காமல் கொரோ னாவை தடுத்து, முன்னேற்றத்துக்கு உதவ வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கொரோனா தடுப்புக்காக, கொரோனா தடுப்பு மையம் (வார் ரூம்) அமைத்து, எட்டு மணிநேர சுழற்சியில், தலா, 10 பேர் என, 30 பேர் பணியாற்றுவார்கள். அதில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு மன நல மருத்துவர் மற்றும் பிற துறையினர் பங்கேற்பார்கள்.

பொதுமக்கள் தங்கள் சந்தேகம், ஆக்சிஜன் தேவை, பிற மருத்துவ உதவிக்கு எங்கு செல்வது என அனைத்தையும் அங்கு கேட்டு பெறலாம். அதற்கான அதிகாரிகள், தொடர்பு எண் போன்றவை வெளியிடப் படும். அதுபோல, தாலுகா அளவில், 5 பேர் கொண்ட குழுவினர், அதேபோல செயல்படுவர்.

தங்களிடம் கொரோனா தொற்று இருப்பது, தனிமைப்படுத்தி கொண்டவர்கள், நோய் தீர்வு தொடர்பான உதவி என எதை வேண்டுமானாலும் கேட்டு பெறலாம். தற்போதைய ஊரடங் கிலும், மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மாவட்ட அளவில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஏற்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கு உதவ உள்ளோம்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் கிடைக்கிறது. அதனையும் அதிகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.ரெம்டெசிவர் மருந்து முன்பு தட்டுப்பாடு அதிகம் இருந்ததால், சிலர் சென்னை சென்று வாங்கி வந்தனர்.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில், தேவையானவர்களுக்கு மட்டும் அம்மருந்து போடப்படுகிறது. எனவே, வெளியே கிடைக்காது. தேவையானவர்களுக்கு மருத்துவமனை மூலம் வழங்குகிறோம். ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் போன்றவற்றை தட்டுப்பாடு இன்றி அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் என பல கருவிகள் உள்ளதால், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டத்தினரும் அதிகமாக வருவதால், தற்போது படுக்கைகள் நிரம்பி உள்ளன.

பிற இடங்களில் தேவையான படுக்கை வசதி உள்ளதால், அச்சப்பட வேண்டும். அதேநேரம், தனியார் மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகளில் தேவையான அளவு படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம்.

இந்நோயை கொடுமையான நோயாக நினைக்காமல், துவக்கத்திலேயே டாக்டரை தொடர்பு கொண்டு விரைவாக குணமடைய முயலுங்கள். தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை. வந்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் முத்துசாமி. 


Top