logo
100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்காளர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி வலியுறுத்தல்

100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்காளர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி வலியுறுத்தல்

26/Mar/2021 02:25:04

புதுக்கோட்டை, மார்ச்: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வாக்காளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவருமான  பி. உமாமகேஸ்வரி. 

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில்   விழிப்புணர்வு  பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்து அவர்  மேலும் கூறியதாவது: 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை ஏப்ரல் 6 -ஆம் தேதி  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்த  தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று தோ;தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் பல்வேறு வாக்காளா; விழிப்புணா;வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், புதுக்கோட்டை நகராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திர மாதிரி வாகனத்தின் பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 


இவ்வாகனம் வாக்குப்பதிவு அவசியம் குறித்தும், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், வாக்களிக்கும் முறைகள், ஜனநாயகத்தில் வாக்காளர்களின் பங்கு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மாவட்டம் முழுவதும்  பயணம் சென்று பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது.  மேலும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை விநியோகித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி, மினி மாரத்தான்,  இருசக்கர வாகன பேரணி, மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைத்தல் போன்ற பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் ஏப்ரல்-6 -இல் நடைபெறும் தேர்தலில் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர். 

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

                                                                               

        


Top