07/May/2021 11:05:18
புதுக்கோட்டை, மே: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெளியிட்ட அரசாணைப்படி சாதாரண கட்டண அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கான வாக்குறுதி நிறைவேறியது.
இதைத் தொடா்ந்து முதல்வரின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்
நகரப் பேருந்துகளில் அடையாள வில்லைகள் மின்னல்
வேகத்தில் ஒட்டப்பட்டது. இந்த பணியினை மாவட்ட
ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழ மை (7.5.2021) இரவு 7 மணியளவில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.