logo
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, காய்கறி வழங்கிய இயற்கை விவசாயி கார்த்திக் மெஸ் மூர்த்தி..

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, காய்கறி வழங்கிய இயற்கை விவசாயி கார்த்திக் மெஸ் மூர்த்தி..

03/Jun/2021 07:58:29

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையில்  முழு ஊரடங்கு காரணமாக  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  இயற்கை விவசாயி கார்த்திக் மெஸ் மூர்த்தி வழங்கினார்

புதுக்கோட்டையில் ஊரடங்கின் காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்துதவித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில், புதுக்கோட்டை இயற்கை விவசாயி கார்த்திக் மெஸ் மூர்த்தி, தனது வயலில் இயற்கை உரங்களால் விவசாயம் செய்த காய்கறிகள் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  நூற்றுக்கும் மேல்பட்டோருக்கு வழங்கினார்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஆட்டோ ஓட்டுநர்கள்  சமூக இடைவெளியுடன் நின்று  நலத்திட்ட உதவியை வாங்கிச் சென்றனர்.

 

Top