logo
ஈரோட்டில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று: 13,916 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ஈரோட்டில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று: 13,916 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

26/Jan/2021 08:19:20

ஈரோடு, ஜன: ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக மாவட்டத்தில் நோய்த் தொற்று குறைய தொடங்கியுள்ளது. தற்போது நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை திடீரென நோய் பாதித்தவர்கள் தினசரி எண்ணிக்கை கூடியுள்ளது.

 சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 27  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 195 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 20 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 916 ஆக உயர்ந்தது.கொரோனாவால் மாவட்டத்தில் இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது மாவட்டம் முழுவதும் 131 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தற்போது தினமும் 1600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் 20 -க்கு கீழ் தான் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தற்போது பொது இடங்களில் சமூகஇடைவெளி  கேள்விக்குறியாகியுள்ளது. முக கவசம் அணியும் பழக்கமும் குறைந்து உள்ளது. மக்கள் தொடர்ந்து அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 


Top