logo
ஈரோடு மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு

06/Apr/2021 05:14:16

ஈரோடு, ஏப். 6- ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 


ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,741 வாக்குச்சாவடி மையங்களின் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது. 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 19லட்சத்து 57ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காலை 10 மணிக்கு மேல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் கூட்டம் அலைமோதியது. ஈரோடு மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 55 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியர் மற்றும்  வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கதிரவன் சம்பத் நகரில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் இன்று காலை அவரது மனைவியுடன் வாக்களித்தார். மொடக்குறிச்சி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார்.


ஈரோடு கிழக்கு தொகுதியின் தி.மு.க., கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் குடும்பத்தினருடன் வாக்களித்தார். ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம், ஈரோடு கலைமகள் பள்ளியில் வாக்களித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க., கூட்டணி த.மா.க., வேட்பாளர் யுவராஜா செங்கோடம்பள்ளம் அரசு பள்ளியில் வாக்களித்தார். மொடக்குறிச்சி தொகுதி பாஜ வேட்பாளர் சரஸ்வதி சி.எஸ்.ஐ., பள்ளியிலும், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி அவரது மகளுடன் சி.எஸ்.ஐ. மகளிர் பள்ளியிலும் வாக்களித்தார

Top