logo
ஆவணப்படங்கள் மூலம் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்:  தமுஎகச  துணைப் பொதுச்செயலர் களப்பிரன்

ஆவணப்படங்கள் மூலம் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்: தமுஎகச துணைப் பொதுச்செயலர் களப்பிரன்

07/Feb/2021 07:45:17

புதுக்கோட்டை, பிப்:  ஆவணப்படங்களைப் பார்ப்பதன்மூலம் அரசியலைப் புரிந்துகொள்ள முடியும் என்றார் தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் களப்பிரன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திடல் அமைப்பின் சார்பில் கவிஞர் எஸ்.இளங்கோ எழுதிய டகோடா 38, வெண்மணி 44- என்ற பன்னாட்டு ஆவணப்படங்கள் அறிமுகத் தொகுப்பு நூல் அறிமுக விழா புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இதில் பங்கேற்று  களப்பிரன்  பேசியது: அமெரிக்க மக்களுக்கு எல்லாம் கிடைத்தும் நிம்மதி இல்லாமல் போனதற்கான காரணம் குறித்து மைக்கேல் மூரின் ṟūnacana vaḻa ineyaṉana என்ற ஆவணப்படம் விளக்குகிறது. மூர் உலகின் பல நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் கல்விமுறை, கைதிகளைப் பராமரிக்கும் முறை, தொழிற் சங்கங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட விவரங்களை தேடிச் தேடிச் சென்று படமாக்கியுள்ளார்.

ஆவணப்படங்களை குறித்த அறிவை இளைஞர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் தொய்வின்றி  கொண்டு செல்ல வேண்டும்.  ஆவணப்படங்களை பார்ப்பதன் மூலம் உலகின் அரசியல் போக்குகளை புந்துகொள்ள முடியும். எனவே, அரசியலை அறிய விரும்பும் அனைவரும் நேரம் ஒதுக்கி ஆவணப்படங்களை பார்க்க வேண்டும். சர்வதேச அளவில் பல்வேறு இயக்குனர்களின் படங்கள் குறித்து தெளிவான அறிமுகத்தை இந்த நூல் விளக்குகிறது.

அமெரிக்காவில் பூர்வகுடி மக்கள் அந்நாட்டில் வாழும் உரிமை கேட்டதற்காக அங்கு டக்கோடாவைச் சேர்ந்த 38 பேர் தூக்கிலிடப்பட்டனர். வெண்மணியில் கூலி உயர்வு கேட்டதற்காக விவசாயத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 44 பேரை உயிரோடு எரித்துக்கொள்ளப்பட்டனர். இந்த இரண்டு அரசியலையும் இணைந்து 21 ஆவணப்படங்கள் குறித்த அறிமுகத்தை இந்தப் புத்தகம் அற்புதமாக விளக்குகிறது என்றார்.

விழாவிற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின்சரவணன் தலைமை வகித்தார். தமுஎகச  திடல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராசி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மைதிலி கஸ்தூரிரெங்கன் நூல்குறித்த அறிமுக உரையாற்றினார். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார், கே.ஜெயபாலன், ஆர்.திருவள்ளுவன், என்.கனி, இரா.ஜெயலெட்சுமி, சுவக்கின் மரியநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

நூலாசிரியர் எஸ்.இளங்கோ எற்புரையாற்றினார். முன்னதாக மு.கீதா வரவேற்க, பீர்முகமுது நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Top