logo
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து கரூரில் காங்கிரஸ் சார்பில்  ஜோதிமணி எம்பி - தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து கரூரில் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி எம்பி - தலைமையில் ஆர்ப்பாட்டம்

11/Jun/2021 10:34:15

கரூர், ஜூன் மோடி அரசின் பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து கரூரில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி  முன்னிலையில்,கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சின்னசாமி  தலைமையில் வெள்ளிக்கிழமை  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அளித் பேட்டி:   பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து நாடெங்கும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு (ஜூன்11)  காங்கிரஸ் கட்சி போரட்டத்தில் ஈடுபட்டுவருகிறது.


நாட்டில் 135 நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியிருக்கிறது. கொரொனாவின் பிடியில் மக்கள் சிக்கித்தவிக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நரேந்திர மோடி  அரசு இரக்கமற்று பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை உயர்த்திவருகிறது.

2013-14 -ஆமஆண்டில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105 டாலர் ஆக இருந்தது. இன்று 72 டாலர் ஆக இருக்கிறது. எனினும் பெட்ரோல் டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 16 டாலர்களாக குறைந்த போதும் விலை மட்டும் உயர்ந்து கொண்டேதான்இருக்கிறது.

கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் விலை 25.72 ரூ உயர்ந்து இருக்கிறது. டீசல் விலை 23.93 ரூ உயர்ந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரொலுக்கு ரூ.9.48 ஆக இருந்த கலால் வரி, தற்பொது ரூ.32.90 ஆக உயர்ந்துள்ளது. டீசலுக்கு 2014 ஆம் ஆண்டில் ரூ.3.56 ஆக இருந்த கலால் வரி, தற்பொது ரூ.31.80 ஆக உயர்ந்துள்ளது.

 இதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும். 20 லட்சம் கோடி ரூபாய் வருமானம் மக்கள் வயிற்றில் அடித்து கொள்ளை யடித்திருக்கிறது மோடி  அரசால  கலால் வரி 459 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியில்கூட மக்களுக்கு இவ்வளவு வரி இருந்ததில்லை. பெட்ரோல் டீசல் மீது உலகிலேயே அதிகப்படியான வரி இந்தியாவில் மோடி ஆட்சியில்தான் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் டீசல் இருக்குமதி செய்யும் பூட்டானில்கூட வரி குறைவாகதான் இருக்கிறது. இவ்வாறு பெறப்படும் கலால் வரியில் மாநில அரசுகளுக்கு பங்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் 4-ஆம் தேதி முதல் ஜூன் 11 வரை மட்டும் பெட்ரோல் டீசல் விலை 21 முறை ஏற்றப்பட்டிருக்கிறது.

இந்த பெருந்தொற்று காலத்தில் ஏற்கெனவே மக்கள் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் போராடிவரும் நிலையில், மனிதாபி மானம் உள்ள எந்த ஒரு அரசாங்கமும் 21 முறை விலையேற்றத்தை செய்திருக்காது.

2013-14 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 52,537 கோடியாக இருந்த பெட்ரோல் டீசல் வரி வருமானம், மோடி பதவியேற்ற ஒரு ஆண்டில் 72,000 கோடியாக உயர்ந்தது. 2014 முதல் 2018 -ஆம் ஆண்டு வரை 11 லட்சம் கோடி ரூபாயை வருமானமாக பெற்றிருக்கிறது. கடந்த 2020 ஆண்டில் மட்டும் 3,00,000 கோடி ரூபாய் வருமானமாக மக்களிடமிருந்து உரிஞ்சப்பட்டிருக்கிறது.

நம்மிடையே எழும் கேள்வி, இப்படி 7 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் கஜானாவுக்கு சென்றுள்ள 20 லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது? கடந்த ஆண்டு பொது முடக்கத்தின்போது காங்கிரஸ் கட்சி ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களுக்கு மாதம் 7500 ரூபாயை 6 மாதங்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தினோம். அதற்கு மனம் வாவில்லை. கடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக கிடைப்பதற்கு போராடவேண்டியிருந்தது.

ஆனால் மக்கள் கட்டும் வரிப்பணம் எல்லாம் அதானி அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகையாக சென்றுவிடுகிறது. இப்படி அளிக்கப்படும் சலுகைகள் தேர்தல் பத்திரங்களாகவும், நன்கொடைகள் மூலமாகவும் மீண்டும் பாஜகவிடம் வந்து சேரும். அதனை ஊழல் மலிந்த பாரதிய ஜனதா கட்சி, எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை வாங்க பயன்படுத்துகிறது.

 பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தால் பல்வேறு துறைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக வேலைவாய்ப்புகள் மிகுந்த ஆட்டொமொபைல் துறை மிகுந்த பாதிப்பை சந்தித்திருக்கிறது. 45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மையை உருவாக்கிய மோடியின் அரசுக்கு இது பற்றி கவலையிருப்பதாக தெரியவில்லை. மேலும் எரிபொருள் விலை ஏற்றத்தால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய பாஜக அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை திரும்பப்பெற வேண்டும். ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களை சுரண்டும் மோடியின் தலைமையிலான ஆட்சியை எதிர்த்து, மக்களை காக்க காங்கிரன் கட்சி தொடர்ந்து போராடும். கொடுங்கோல் ஆட்சியை மக்கள் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் தூக்கி எறிவார்கள் என்றார் ம்பி- ஜோதிமணி .

Top