logo
மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா.

மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா.

04/Mar/2020 07:11:23

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயிலில் பாளையெடுப்பு திருவிழா புதன்கிழமை (மார்ச்4) நடைபெற்றது.

 

 கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்பு திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதி பெண்கள் தென்னம்பாளைகள், நெல்மணிகளை அலங்கிரப்பட்ட குடத்தில் வைத்து கிராமத்தின் மையப்பகுதியில் இருந்து கும்மிப்பாடல், தப்பாட்டம், முழங்க ஊர்வலமாகச்சென்று கோயில் குளத்தில் தென்னம்பாளைகள், நெல்மணிகளை விட்டனர். தொடர்ந்து, கோயிலில் அம்மனுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணிகளை கீரமங்கலம் போலீஸார் மேற்கொண்டனர்.


செய்தி மற்றும் படம்: மகிழினி

Top