logo
ஈரோடு மாவட்டத்திற்கு இன்று 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசி வரப்பெற்றுள்ளது

ஈரோடு மாவட்டத்திற்கு இன்று 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசி வரப்பெற்றுள்ளது

16/Apr/2021 08:45:02

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்திற்கு இன்று 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சுகாதாரத் துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து  ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை,  பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோபி அரசு மருத்துவ மனை, பவானி அரசு மருத்துவமனை,  மற்றும் சிறுவல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளவர்களான அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர் களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக அரசின் பிற துறைகளில் பணிபுரியும் முன் கள பணியாளர்களுக்கும் மூன்றாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற இணைய நோய் உள்ளவர்களுக்கும் மற்றும் நான்காவது கட்டமாக பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் படிப்படியாக போடப்பட்டு  வருகிறது. 


ஒவ்வொரு தடுப்பு ஊசி மையமும் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை கண்காணிப்பு அறை என மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.  இதற்கு போதுமான காற்றோட்டமான இடவசதி இணைய இணைப்பு மின்சாரம் பாதுகாப்பு போன்றவற்றுக்கான அனைத்தும் முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது மேலும் ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் பாதுகாவலர் பயனாளிகளை சரி பார்ப்பவர் தடுப்பூசி வழங்குபவர் கண்காணிப்பாளர் என ஐந்து பேர் கொண்ட குழு மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .

அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசிகள் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது  ஈரோடு மாவட்டத்திற்கு  5000 தடுப்பூசிகள் வரப்பெபட்டுள்ளன. ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

Top