23/Mar/2021 11:07:03
புதுக்கோட்டை, மார்ச்: திருமயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து திருமயம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
திருமயம் தொகுதி வேட்பாளர் பி.கே.வைரமுத்து திருமயம் தொகுதிக்கு உள்பட்ட நல்லிப்பட்டி. வளையம்பட்டி முனசந்தை கடையக்குடி உள்ளி 20 -க்கும் மேற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு செய்துள்ள சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை ஒரு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். இதில், அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ,உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.