logo
தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்:அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்:அமைச்சர் செங்கோட்டையன்

12/Dec/2020 06:59:45

ஈரோடு:  தமிழகஅரசை பொருத்தவரையிலும் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள் ளன.  தனியார்பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் தேர்வு நடத்த தடையேதும் இல்லை. 50 சதவிகித பாடங்களை குறைப்பது மட்டுமல்ல எந்தெந்த பாடங்களை நடத்துகிறோமோ அந்தப் பாடங்களில் இருந்துமட்டும் தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

 ஈரோடுமாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றதொகுதிக்குள்பட்ட மொடச்சூர், அயலூர், கோட்டுப்புள்ளாம் பாளையம், அளுகுளி,கலிங்கியம் உள்ளிட்டஊராட்சிகளில் ரூ.4.06 கோடி மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, ,பால் உற்பத்தியாளர்கள் சங்ககட்டிடத் துக்கான பூமிபூஜையுடன் பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் பொதுபணியாளர்கள் கூட்டுறவுசிக்கனம் மற்றும் கடன் சங்கம் நூற்றாண்டுவிழாவில் கலந்து கொண்டு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மேலும் கூறியதாவது:  தமிழக அரசை பொருத்தவரையிலும் அரையாண்டுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தனியார்பள்ளிகள் விரும்பினால் ஆன் லைனில் தேர்வு நடத்த  தடையில்லை.  மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க எங்கெங்கு ஆசியர்கள் தேவைப்படுகிறாக்களோ அதற்கேற்ப  கூடுதல் ஆசிரியர்  நியமிக்கப்படுவார்கள். தற்போது உள்ள ஆசியர்களே போதும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தால் அதையும் அரசு பரிசீலனைசெய்யும். 

தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித் துறை சரியாக செயல்படவில்லை என வெள்ளை அறிக்கை கேட்டதற்கு, அரசு சரியான முறையில் செயல்படவில்லை என்றால் தான் வெள்ளை அறிக்கை அளிக்க முடியும். அரசு சரியாக செயல்பட்டு வருவதால் வெள்ளை அறிக்கை என்பது தேவையற்ற ஒன்று. 50 சதவிகித பாடங்களை குறைப்பது மட்டுமல்ல எந்தெந்த பாடங்களை நடத்து கிறோமோ அந்தப் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதற்கான அட்டவணையும் இரண்டு மூன்று நாட்களில் வெளியிடப்படும். 

சிபிஎஸ்இ- பள்ளிகளுக்கு 10, 11, 12 -வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் எனஅறிவித்துள்ளது. இது குறித்து மத்தியஅரசுதான் பதில் தரவேண்டுமே தவிர மாநில அரசு அதற்கு விளக்கம் கூறமுடியாது. மாநில அரசின் செயல்பாடுகளை பொருந்திருந்து பாருங்கள் என்றார் அமைச்சர் செங்கோட்டையன். 


Top