logo
கொரோனா ஊரடங்கு: பல்வேறு தளர்வுகளுடன் நவ.30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

கொரோனா ஊரடங்கு: பல்வேறு தளர்வுகளுடன் நவ.30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

01/Nov/2020 09:46:17

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. 

இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்புகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் உள்ள தளர்வுகள்: 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் நவம்பர் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 -ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.  தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை வரும் 10 -ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட வேண்டும். வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் வளாகங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் 50% இருக்கை விதி பொருந்தும். 

 கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு  நவம்பர் 2-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம். அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 -ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி. நீச்சல் குளங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் மறு அனுமதி வரும் வரை திறக்கப்படாது.

Top