logo
திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியில் சிலம்பாட்டம் பதிலும் சிறார்கள்

திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியில் சிலம்பாட்டம் பதிலும் சிறார்கள்

05/Jan/2021 08:51:24

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா,மாரி கண்ணன் என்பவர் சிலம்புகளை பயிற்சி அளித்து வருகிறார்.

இதில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் குறிப்பாக பெண் குழந்தைகள் 7 முதல் 13 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் சிலம்பாட்டம் பயின்று வருகின்றனர் அலங்கார சிலம்பாட்டம் போர் சிலம்பாட்டம் 2 இரண்டு வகைப்படும்.

இதில் கோயில் திருவிழாக்கள் மற்றும் விழாக்களில் விளையாடப்படும் சிலம்பாட்டம் அலங்கார சிலம்பாட்டம் எனப்படுகிறது. ரிப்பன் ஆகியவை சிலம்பு கம்பத்தில் கட்டி பார்ப்பவர்களை கவரும் வண்ணம் சிலம்பு சுற்றுவது அலங்கார சிலம்பாட்டம் எனப்படுகிறது.

இதேபோல் போட்டிகள் மற்றும் தற்காப்பு கலைகளை சிலம்பாட்டத்தில் விளையாடப்படும் சிலம்பாட்டம் போர் சிலம்பாட்டம் என அழைக்கப்படுகிறது. தற்காப்பு கலை மற்றும்  நவீன சிலம்பாட்டம் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு உடல் வலிமையுடன் மன வலிமையும் கற்று எதிரிகள் தாக்கும் போது தடுத்து தற்காப்uது சிலம்பம் ஆகவே ஆர்வமுடன் பயில்கிறோம் என மாணவ, மாணவிகள் கூறினர். 


Top