logo
ஈரோட்டின் மூத்த மருத்துவரும் பசுமை இயக்கத்தலைவருமான தோழர் ஜீவானந்தம் மறைந்தார்

ஈரோட்டின் மூத்த மருத்துவரும் பசுமை இயக்கத்தலைவருமான தோழர் ஜீவானந்தம் மறைந்தார்

02/Mar/2021 06:18:44

ஈரோடு, மார்ச்: உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் காலமான ஈரோட்டின் மூத்த மருத்துவரும் தமிழக பசுமை இயக்கத்தலைவருமான  தோழர் ஜீவானந்தம்(74 ) மறைவுக்கு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட இரங்கல் செய்தி:  அறிவாயுதமாய் ஒளி வீசிய அன்பின் சிகரம், காந்திய தத்துவத்தில் மார்க்ஸ்சீயத்தை அணுகிய அற்புத மனிதர். மனித  குலம் வாழ வேண்டுமென்றால் இயற்கை அதன் இயல்போடு இருக்க வேண்டும் என சூற்றுச்சூழலை காத்த போராளி.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் இயக்க செயல்பாடுகளில்  மிகத்தீவிரமாக பங்கேற்று வந்தவர். இடது சாரி சிந்தனையாளகும் விடுதலைப் போராட்ட வீரர் இவரது தந்தை வெங்கடாசலம். திருச்சியில் பட்டப்படிப்பை முடித்தபின்னர்  தஞ்சை மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார். பிறகு சென்னையில் மயக்கவியல் சிறப்பு பிரிவை பயின்றார்.

காந்திய-கம்யூனிஸ ஆர்வலரான மருத்துவர் ஜீவானந்தம் சுற்றுச்சூழல் பிரச்னகளை தன் இறுதிக்காலம் வரை முன்னெடுத்துச் சென்றார். எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். தமிழ்ச்சமூகம் அறிந்திடாத வேற்று மொழியிலுள்ள ஏராளமான நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பண்பாட்டுத்தளத்தில் தொடந்து இயங்கிய தத்துவ ஞானி. கல்விக்கூடம், மருத்துவமனையை உருவாக்கி பலருக்கும் மறுவாழ்வு கொடுத்த மாமனிதர். இவரது மறைவு தமிழ்சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதயக்கோளாறுக்கு சிகிச்சை பெற்ற ஓய்விலிருந்த நிலையில் மார்ச்.2 பிற்பகலில்  ஈரோட்டில் காலமான மருத்துவர் ஜீவானந்தத்துக்கு  மனைவி இந்திரா, மகன் சத்யா, மகள் திவ்யா ஆகியோர் உள்ளனர்.


Top