logo
தொழிலாளி கொலை வழக்கில் முதலாளி உளபட நான்கு பேர் கைது

தொழிலாளி கொலை வழக்கில் முதலாளி உளபட நான்கு பேர் கைது

04/Mar/2021 10:08:32

ஈரோடு மார்ச்: ஈரோடு மாவட்டம், பவானி அருகே முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே நிலவி வந்த பிரச்னையில் முதலாளி மணிகண்டன் என்பவர் தனது நண்பர்களுடன் தொழி லாளி சதீஷ்குமார் என்பவரை அரிவாள் வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முதலாளி உள்பட  நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். 

ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஆப்பக்கூடல் ஒரிச்சேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார்.இவர் தளவாய்பேட்டை பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாள்களுக் கு முன் காலையில், இவரது வீட்டின் முன்பு நின்றிருந்த சதீஶ்குமாரை  மர்மநபர்கள் நான்கு பேர், அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமாரை அருகிலிருந்தோர் அவரை  மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தளவாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் சதீஷ்குமார் நீண்ட நாட்களாக வேலை செய்து வந்ததும், இவரிடம் வேலை செய்யும் போது சரியாக வேலைக்கு அவ்வப்போது வராத காரணத்தினால் சதீஸ்குமாரை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக தொழிலாளிக்கும் , முதலாளிக்கும்  ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக  சதீஷ்குமாரை வெட்டியது தொரிய வந்தது. 

இச்சம்பவத்தில் மணிகண்டன், மற்றும் அவரது உறவினரான ஈரோடு கருங்கல்பாளையத் தைச் சேர்ந்த, ஆனந்தபிரபு, தளவாய் பேட்டையை சேர்ந்த நண்பர்கள் சூரியகுமார், ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலபதி ஆகியோர் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பவானி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் போலீஸார்  தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்,  லட்சுமி நகர் பகுதியில் வாகன சோதனையில் குற்றவாளிகளான மணிகண்டன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். 


மேலும் மணிகண்டனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தன்னை வேலையிலிருந்து நிறுத்தியதால் ஏற்பட்ட கோபத்தில் சதீஷ்குமார் பொது இடங்களில் தன்னை தகாத வார்த் தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து சதீஷ்குமாரை வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

 இதையடுத்து  அவர்களிடமிருந்து ஒரு வீச்சரிவாள், இரண்டு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை யும் போலீஸார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் பவானி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி  கிளை  சிறையில் அடைத்தனர். தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே நிகழ்ந்த மோதல் கொலையில் முடிந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே  அதிர்ச்சியை  ஏற்படுத்தி யுள்ளது

Top