10/Jun/2021 09:52:43
புதுக்கோட்டை
மாவட்டம், ஆலங்குடி அருகே பெண் ஊராட்சித் தலைவரை இழிவாக பேசி சமூக ஊடகங்களில் அவதூறு
பரப்பியவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை பட்டியின வகுப்பைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் பிரேமா(44). மற்றொரு சமூகத்தை சேர்ந்த துணைத் தலைவர் குறித்தும் அப்பகுதியைச் சேர்ந்க நபர் இழிவாகப்பேசி சமூக ஊடகங்களில் அவதூறாக பதிவிட்டாராம். அந்த பதிவு பரவியதைத்தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அவதூறு பரப்பிய அந்த நபரை உடனே கைது செய்யக்கோரி ஆலங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் அலாவுதீன் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.