logo

நுங்கு வெட்டிய விவசாயி கொலை: காவலர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு.

05/May/2020 05:57:51

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நுங்கு வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவலர் உள்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் ஊராட்சி வலசேரிப்பட்டியைச் சேர்ந்தவர் வேலு மகன் பாண்டியன்(42). விவசாயியான இவர், சிலருடன் சேர்ந்து தெட்சிணாபுரம் விலக்கு சாலை பகுதியில் திங்கள்கிழமை நுங்கு வெட்டுவதற்கு சென்றுள்ளார்.

  அப்போது, நுங்கு வெட்டுவதற்கு அதே ஊரைச் சேர்ந்த எ.ஆரோக்கிய ஜெகதீசன், காவலரான எஸ்.அருள் அகிலன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், பலமாக தாக்கியதில் பாண்டியன் அந்த இடத்திலேயே  உயிரிழந்தார்.
இது குறித்து விசாரனை மேற்கொண்ட வல்லத்திராகோட்டை  போலீஸார், ஆரோக்கிய ஜெகதீசன், ஆலங்குடி காவல் நிலைய காவலரான அருள் அகிலன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில், ஆரோக்கிய ஜெகதீசனை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

Top