19/Jun/2021 01:10:20
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான குற்றங்களைத் தடுக்கவும், புகார்களை துரிதமாக விசாரிக்க உதவிடும் வகையில் பெண் காவல் அதிகாரிகளுக்கு மடிக்கணினி மற்றும் இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன்
கலந்து கொண்டு பெண்கள் எதிரான குற்றங்களை குறைக்க உடனே விரைந்து விசாரித்து துரித
நடவடிக்கை எடுக்கவும், ரோந்து பணியில் ஈடுபடும்
வகையில்
Women Help Desk - 2021 திட்டம் மூலம் பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண்
காவலர்களுக்கு 20 பேருக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகளை வழங்கினார்.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.