logo
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டம்

28/Feb/2021 10:54:44

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநில சங்க நிர்வாகக்குழு முடிவின்படி வருவாய்க் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம்   வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இயற்கையில் இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும் கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 விழுக்காடு என்பதை 30 விழுக்காடாக வழங்கவேண்டும் பணிமூப்பு காலங்களில் 10 ஆண்டுகள் என்பதை ஆறு ஆண்டு குறைக்கவும் கோருதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது 

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க  மாவட்ட தலைவர் சுப்பையா தலைமையில்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Top