logo
பவானிசாகரில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு முகாமில் மறுவாழ்வு துறை உதவி ஆணையாளர்கள் ஆய்வு

பவானிசாகரில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு முகாமில் மறுவாழ்வு துறை உதவி ஆணையாளர்கள் ஆய்வு

10/Aug/2021 02:18:46

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பு முகாமில் மறுவாழ்வு துறை உதவி ஆணையாளர்கள் செவ்வாய்க்கிழமை  ஆய்வு மேற்கொண்டனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இரட்டைக்குடியுரிமை.

இலவச மின்சாரம், மேலும் முகாமில் உள்ள முதியோர் மற்றும் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி இலங்கை தமிழர்கள் சார்பில் தமிழ்நாடு மறுவாழ்வு துறை ஆணையருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் இன்று இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்த மறுவாழ்வு துறை உதவி ஆணையாளர்கள் பாஸ்கர் மற்றும் ராமதிலகம் ஆகியோர் இலங்கைத் தமிழர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

Top