logo
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்: மார்ச்.8-இல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்: மார்ச்.8-இல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

04/Mar/2021 12:02:31

புதுக்கோட்டை, மார்ச்: திருவப்பூர்  அருள்மிகு முத்துமாரியம்மன்  கோயில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெறும் தேரோட்டத்தையொட்டி  வருகிற (8.3.2021) திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோ.ில் தேர்த்திருவிழா   நாளான (8.3.2021) திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அதற்கு பதிலாக  வருகிற 27.3.2021 சனிக்கிழமை அன்று  வேலை நாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 28.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  வேலை நாள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர்  விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும், அரசு பொதுத்தேர்வுகள் அரசு அறிவித்த தேதிகளில் மாற்றம் எதுவுமின்றி நடைபெறும் 

Top