logo
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள  சட்டப் பேரவைத் தேர்தல்கள்: அதிமுக சார்பில் பேட்டியிடுவோர் 24.2.2021 முதல் 5.3.2021 வரை  விருப்ப மனு அளிக்கலாம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள சட்டப் பேரவைத் தேர்தல்கள்: அதிமுக சார்பில் பேட்டியிடுவோர் 24.2.2021 முதல் 5.3.2021 வரை விருப்ப மனு அளிக்கலாம்

16/Feb/2021 10:55:24

சென்னை: இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

2021 - இல்  புதுச்சேரி மற்றும் கேரள சட்டப் பேரவைகளுக்கு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு அனத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட  விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள்,

தலைமைக் கழகத்தில் வருகின்ற 24 2.2021 புதன்கிழமை முதல் 5.3.2021 - வெள்ளிக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் -5 மணி வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு விண்ணப்பக் கட்டணத் தொகையை செலுத்தி  விருப்பமனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  தமிழ்நாடு- ரூ.15,000, புதுச்சேரி- ரூ.5,000, கேரளம்- ரூ.2,000 - என அதில் குறிப்பிட்டுள்ளனர்.


Top