logo
தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக  விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பா

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் புதுக்கோட்டையில் ஆர்ப்பா

06/Mar/2021 12:44:11

புதுக்கோட்டை, மார்ச்: மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த 100 நாள்களுக்கு மேலாக  போராடி வரும் விவசாயிகளின் போராட்டத் திற்கு நாடு முழுவதும் உள்ள இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக  புதுக்கோட்டையில் விவசாயிகள் கூட்டமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை விவசாய சங்க நிர்வாகி எஸ். சங்கர் தொடக்கி வைத்து பேசியதாவது: மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக  கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச்சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி  தில்லி விவசாயிகள் கடந்த 100 நாட்களாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பல  கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இந்தப் போராட்ட களத்தில் இருந்த விவசாயிகளில் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை தில்லி விவசாயிகள் போராட்டம் எப்போது முடிகிறதோ அதுவரையில் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து ஆதரவை அளிக்கும் எனறார்.

இதில், எஸ்.சி. சோமையா, எம்.என். ராமச்சந்திரன், எம். ஜியாவுதீன், முருகானந்தம், நாராயணன், க. சுந்தர்ராஜன், சிற்பி உலகநாதன் உள்பட திரளானோர் கருப்புக்கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Top