logo
பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும்  இயங்கும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் இயங்கும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

20/Jan/2021 10:00:55

 ஈரோடு, ஜன:  பள்ளிகள் தற்போது திறக்கப்பட்ட நிலையில், வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெறும். நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் மாலை 6 முதல் 8 மணி வரைஆன்லைன் மூலம் நடைபெறும் என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தற்போதுபள்ளிகள் திறக்கப்பட்டநிலையில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் அரசுஅறிவித்த நாட்களில் விடுமுறை விடப்படும். அரசுமற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் 92 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்துள்ளனர்.மீதமுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

எப்போதும் 60 நாட்களுக்கு முன்பாக சட்டமன்றதேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும்

 அப்படி அறிவித்தவுடன் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். மீதமுள்ளவகுப்பு மாணவர்கள்  அனைவரு தேர்ச்சி அளிப்பது தொடர்பாக பிறகு அறிவிக்கப்படும்.  தற்போதுள்ள வேலைநாட்களில் 60 சதவீதம் பாடத்தைக்கூட நடத்த முடியாது எனக் கல்வியாளர்கள் கூறியுள்ளனர். இதைப் போல தினமும் ஒவ்வொன்றை  அவர்கள் கூறிவருகின்றனர். மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள கல்வியாளர்கள் முன்வர வேண்டும். நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் மாலை 6 முதல் 8 மணிவரைஆன் லைன் மூலம் நடைபெறும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

முன்னதாக, கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன். மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும்  அனைத்துத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,  அடுத்தமாதம் 6-ஆம் தேதி பல்வேறு முன்னணி தனியார்துறை நிறுவனங்களில் படித்த வேலை வாய்ப்பற்றஆண் பெண் இருபாலருக்கும்  வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன்  மேம்பாட்டு பயிற்சிக்கானபதிவு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு ,மாவட்ட தொழில் யைத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள் மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கிகடன் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் சுமார் 12,000  பேருக்கு வேலைவாய்ப்பு  கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Top