logo
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் ?ஈரோடு வனப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் ?ஈரோடு வனப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

10/Jun/2021 03:07:41

ஈரோடு, ஜூன்: மாவோயிஸ்டுகள் நடமாட்டம்  தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து  ஈரோடு வனப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தையொட்டிய கர்நாடகா கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. மாவோயிஸ்டுகள் அடிக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள போலீஸ் நிலையங்களில் திடீரென தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சென்று அரிசி பொருட்களை பெற்றுச்செல்லும் சம்பவங்களும்  தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால் நக்சல் பிரிவு போலீசார் வனத்துறையினருடன்  இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்தும், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. அதிகாரிகளுக்கு அவலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் இருக்கும் சூழல் ஆகியவற்றை பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் சதி வேலையில் ஈடுபட முடிவு  செய்துள்ளதாக உளவுத்துறையின் மூலம் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மேலும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதைடுத்து நக்சல் பிரிவு போலீசாரும், வன துறையுடன் இணைந்து  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள  சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப் பட்டுள்ளது.

இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா மாநில  எல்லையை ஒட்டி அமைந்துள்ள  பர்கூர், வெள்ளித்திருப்பூர், பங்களா புதூர் பவானிசாகர், ஆசனூர் ,கடம்பூர், ஏர்மாளம், தாளவாடி உள்பட 10 போலீஸ் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு போலீஸ் நான்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.

தாளவாடி சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவிர நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வனத்துறையினர் தனித்தனியாகவும்கூட்டாகவும் மாவோயிஸ் டுகள் நடமாட்டம் குறித்து வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் கண்காணித்து வருகின்றனர்.

மாவோயிஸ்டுகள், சந்தேகப்படும்படியான நபர்கள் கர்நாடகா எல்லையோரப் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து எல்லையோர கிராமங் களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலை கிராம பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

Top