logo
தமிழகத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.286.91 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.286.91 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

13/Feb/2021 12:45:06

புது தில்லி: தமிழகத்தில் நேரிட்ட இயற்கை பேரிடர்களான புரெவி புயல் மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.286.91 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் புது தில்லியில் இன்று(13.2.2021) நடைபெற்ற உயர்நிலை குழுக் கூட்டத்தில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழகம், ஆந்திரம், பிகார், புதுச்சேரி மற்றும் மத்தியப் பிரசேத மாநிலங்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகையாக ஒட்டுமொத்தமாக ரூ.3,113.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், தமிழகத்துக்கு நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், நிரவி புயல் பாதிப்புக்கு ரூ.63.14 கோடியும் புரெவி பயுல் பாதிப்புக்கு ரூ.223.77 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ரூ.9.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிகார் மாநிலத்துக்கு  ரூ.1,255.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 


Top