17/Feb/2021 07:12:47
ஈரோடு பிப்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள எட்டிக்குட்டை பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
அந்தியூர் அருகே உள்ள எட்டிக்குட்டை பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி
என்பவர் மகள் கோதைநாயகி(17). இவர் ஆப்பக்கூடல் புதுப்பாளையம்
பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்
பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இவர்
கடந்த இரண்டு தினங்களாக உடல்நிலை சரியில்லாமல்
வீட்டில் இருந்து வந்த நிலையில், புதன்கிழமை
காலையில் அவர் தனது அறையில் இருந்த
மின்விசிறியில் தூக்கிட்டு
தற்கொலை
செய்து கொண்டது வீட்டிலிருந்தவர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ
இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோதை நாயகியின் உடலை கைப்பற்றி அந்தியூர்
அரசு மருத்துவமனைக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.