logo
தமிழகத்தில் சுமுகமான நடந்து முடிந்த தேர்தல்... தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு

தமிழகத்தில் சுமுகமான நடந்து முடிந்த தேர்தல்... தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு

06/Apr/2021 10:51:24

சென்னை:  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியது:  தமிழகத்தில் தோராயமாக 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 78 சதவீதமும், நாமக்கல்லில் 77.91 சதவீதமும், அரியலூரில் 77.88 சதவீதம் என முறையே முதல் 3 இடங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

மிகக்குறைந்த அளவாக  முறையே சென்னையில் 59.40 சதவீதமும், செங்கல்பட்டில் 52.77 சதவீதமும், நெல்லையில் 55.16 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் கிடைக்கும் இறுதித்தகவல்களின் அடிப்படையில் இந்த சதவீதம் மாறுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6,28,69,955, ஆண்கள் 3,92,03,651 பெண்கள் 3,19,39, 112, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,192, முதல்முறை வாக்காளர்கள் 13,83,610 பேரும் உள்ளனர். சட்டப்பேரவை தொகுதிகளின் வேட்பாளர்கள் 3,998 பேர், ஆண் வேட்பாளர்கள் 3,585 பெண் வேட்பாளர்கள்: 411. மூன்றாம் பாலினத்தவர்கள் 02 பேர் களத்தில் உள்ளனர்.

  ஒட்டுமொத்த வாக்குச்சாவடிகள் 88, 937.  வாக்கு இயந்திரங்கள் எண்ணிக்கை 1,55, 102, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1,14,205. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறித்து கொள் ளும் வகையில் விவிபேட் 1 லட்சத்து 20 ஆயிரத்து 807 இயந்திரமும் பயன்படுத்தப் பட்டது. பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவ படையினரும், மேலும் தேர்தல் பணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Top