01/Jan/2021 04:45:12
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை தம்புரட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தலிங்கம் (46) . இவருக்குச் சொந்தமாக 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக பர்கூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்கு சென்ற பர்கூர் போலீசார் தோட்டத்தை சோதனையிட்டதில் 7 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் வீட்டை சோதனை செய்ததில் அங்கிருந்த ஒரு அட்டைப்பெட்டியில் உலர வைத்த கஞ்சா இலைகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சித்தலிங்கத்தை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து பதிவு செய்த போலீசார் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.