logo
ஆராய்ச்சி மணி செய்தி எதிரொலி…

ஆராய்ச்சி மணி செய்தி எதிரொலி…

29/Jun/2021 07:55:01

புதுகை டவுன்ஹால் அருகேயுள்ள  பயணிகள் நிழல்குடையை மூடியிருந்த  திரை விலகியது



புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியிலுள்ள டவுன் ஹால் அருகேயுள்ள     பயணிகள் நிழல்குடையை  அங்கு காத்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பு கருதி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு  உடனடியாக மூடப்பட்டிருக்கும் திரையை  அகற்ற   வேண்டுமென பொதுமக்களும், பயணிகளும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலை குறித்து ஆராய்ச்சி மணி டாட் காம் இணையதளத்தில்  படத்துடன் செய்தி 29.6.2021 பிற்பகலில் வெளியானது. இதையறிந்த நகராட்சி நிர்வாகம் சுமார் 1 மணி நேரத்துக்குள் இந்த பேருந்து நிறுத்தத்தை மூடியிருந்த திரைச்சீலையை அகற்றி நடவடிக்கை எடுத்தது. இதற்கு பயணிகளும் பொதுமக்களும் நன்றிி தெரிவித்தனர்.


Top