logo
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: மசோதா பேரவையில் நிறைவேற்றம்

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: மசோதா பேரவையில் நிறைவேற்றம்

26/Feb/2021 05:09:51

சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு கல்வி மற்றும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று தாக்கல் செய்தார். மேலும், சீர்மரபினருக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மசோதாக்களும் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை(பிப்.26) நிறைவேற்றப் பட்டுள்ளன. இதன் மூலம் எம்பிசி இட ஒதுக்கீட்டுப் பிரிவில் எம்பிசி-வி என்ற உள்பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது.

Top