logo

கணவர் இறந்த துக்கத்தில் மகள் மகன்களுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி

08/Nov/2020 07:29:42

ஈரோடு கருங்கல்பாளையம் கிருஷ்ணன்பாளையம்ரோட்டை சேர்ந்த முட்டை வியாபாரி ராஜா(55) . இவரது மனைவி சிவகாமி .இவர்களுக்கு பிரேம்குமார் (25) புவனேஷ் குமார் (20) என இரண்டு மகன்களும் ஷாலினி (17). என்ற மகளும் உள்ளனர்.

இதில் பிரேம்குமார் தந்தையுடன் முட்டை வியாபாரம் செய்து வருகிறார் புவனேஷ் குமார் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.ஷாலினி அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் ராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை இறந்துவிட்டார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரை நிலைகுலையச்செய்துவிட்டது.

இந்நிலையில், இன்று காலையில் நீண்ட நேரமாகியும் சிவகாமி வீட்டு கதவு திறக்கப்படமல் இருந்தது. இந்த வீட்டுக்கு வந்த அவரது உறவினர் கதவை தட்டினார் ஆனால் திறக்கப்படவில்லையாம்.  இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார் அப்போது சிவகாமி அவரது மகன்கள் பிரேம்குமார் புவனேஷ் குமார் மகள் ஷாலினி ஆகியோர் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

இதுகுறித்து, தகவலறிந்த கருங்கல்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

 அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜா இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுளது. 


Top