logo
விராலிமலை தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு  விலையில்லா மிதிவண்டிகள்:  அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கல்

விராலிமலை தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கல்

30/Dec/2020 08:14:51

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  வழங்கிப் பேசியதாவது: 

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற நலத் திட்டங்களை  அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசுப் பள்ளியில் பயிலும்  மாணவர்களின் மருத்துவக் கனவை 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் மூலம் நனவாக்கப்பட்டுள்ளது

. பள்ளிகளில் பயிலும் மாணவா;களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, நோட்டுப் புத்தகம், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள், காலணிகள்  உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் தற்போது சூரியூர்  அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 42 மாணவர்கள், 51 மாணவிகள் என மொத்தம் 93  பேருக்கு  விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் தினமும் பள்ளிக்கு விரைவாக வருவதற்கு  உதவும். 

 பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களை தினமும் தவறாமல் படிக்க வேண்டும்.  கல்வியுடன் சேர்ந்து நற்பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.இதன் மூலம்தான்  எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக  உருவாக முடியும். எனவே தமிழக அரசின் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி, கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

முன்னதாக விராலிமலை ஊராட்சி ஒன்றியம், சூரியூர் பிச்சைதேவன்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 14 -ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ்  ரூ.4 லட்சம் மதிப்பீட்டில்  புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, பைப் லைன் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு  குடிநீர் ஏற்றும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார் 

இந்நிகழ்ச்சியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Top