logo
அப்துல்கலாம் பிறந்தநாள்- தமிழக வாழ்வுரிமைக்கட்சியினர் மரக்கன்று வழங்கல்

அப்துல்கலாம் பிறந்தநாள்- தமிழக வாழ்வுரிமைக்கட்சியினர் மரக்கன்று வழங்கல்

15/Oct/2020 01:46:14

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின்  பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினார்

புதுக்கோட்டை  மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.

பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் பேருந்தில் சென்றவர்களுக்கு அரசமரம், புங்கமரம், நெல்லிக்காய் கன்றுகள் ,வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை அனைவருக்கும்  இலவசமாக வழங்கிய நிகழ்ச்சி அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Top